கேரளாவுக்கு அனுப்பிவைப்பு: நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் முழுமையாக அகற்றம்

நெல்லை: கேரளாவில் இருந்து எடுத்து வரப்பட்டு நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட கேரள கழிவுகளை அகற்றும் பணி நிறைவு பெற்றது. நெல்லையை அடுத்த கோடகநல்லூர் தனியார் தோட்டப்பகுதி, அரசு புறம்போக்கு நிலம், வருவாய்த்துறை ஊழியரின் நிலத்தில் கேரள மருத்துவ கழிவுகள் உள்ளிட்டவைகள் மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்டிருந்தது. இந்த கழிவுகளை கேரளாவுக்கே எடுத்து செல்லும்படி பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நெல்லை மாவட்டத்தில் 7 இடங்களில் கொட்டப்பட்ட கேரள மருத்துவ கழிகள் அகற்றப்பட்டன.

நேற்று இலந்தைக்குளம், வேளார்குளம், கோடகநல்லூர், பாரதியார்நகர், திடியூர் பகுதிகளில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்டது. நேற்று 18 லாரிகளில் கேரள மருத்துவ கழிவுகள் ஏற்றப்பட்டு கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இன்றும் 8 லாரிகளிலும் மருத்துவ கழிவுகள் ஏற்றப்பட்டு கேரளாவுக்கு அனுப்பப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 480 டன் கேரள மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. கேரள மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்ட இடத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

The post கேரளாவுக்கு அனுப்பிவைப்பு: நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் முழுமையாக அகற்றம் appeared first on Dinakaran.

Related Stories: