இதே விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடிப்படையாக கொண்டு இந்திய தலைமை.தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மனுதாரர் சூரியமூர்த்தி ஆகியோர் வரும் 23ம் தேதி நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு இருந்தது.
அந்த நோட்டீஸ் அடிப்படையில் இன்று அதிமுக சார்பில் விளக்கமளிக்க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி இருக்கிறார். அவர் இரட்டை இலை சின்னம் தொடர்பாகத் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு முக்கிய விளக்கங்களை அளிக்க இருக்கிறார். இதையடுத்து இந்த விவகாரத்தில் எடப்பாடிக்குச் சாதகமாகவே முடிவு வரும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.
The post இரட்டை இலை சின்னம் விவகாரம்.. எடப்பாடி பழனிசாமி தரப்பில் தேர்தல் ஆணையத்தில் சி.வி.சண்முகம் ஆஜர்..!! appeared first on Dinakaran.