முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அரசால் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு முறையாக கிடைக்கிறதா? அரசின் வளர்ச்சி பணிகள் சரியாக நடக்கின்றனவா? என்பதை மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்து, நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி கடந்த 5, 6-ந்தேதிகளில் கோவை மாவட்டத்தில் கள ஆய்வை தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 29, 30, 31-ம் தேதிகளில் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் செய்யவுள்ளார். தூத்துக்குடியில் ரூ.30 கோடியில் கட்டப்பட்டுள்ள டைடல் நியோ பூங்காவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
30ம் தேதி தூத்துக்குடியில் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். 2024-25 முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்வி பயின்ற மாணவிகளுக்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. கன்னியாகுமரியில் ரூ.37 கோடியில் கட்டப்பட்டுள்ள கண்ணாடி கூண்டு பாலத்தை முதல்வர் திறந்து வைக்க உள்ளார்.
விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடியில் கண்ணாடி கூண்டு பாலம் கட்டப்பட்டுள்ளது. டிச.31-ல் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
The post டிசம்பர் .29, 30, 31-ம் தேதிகளில் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு appeared first on Dinakaran.