மற்றொரு சிறுமி சிங்கம் ஒன்று சகோதரி ராஹ்லியை கவ்விக் கொண்டு ஓடியதை சம்பவத்தை தனது தந்தையிடம் அழுகையுடன் கூறினார். அதிர்ச்சியடைந்த தந்தை, தனது மகளை தேடி அப்பகுதிக்கு சென்றார்.
சுமார் 400 மீட்டர் தூரத்தில் மகள் ராஹ்லியை கடித்துக் குதறிக் கொண்டிருந்த சிங்கம், அவரது தந்தையை பார்த்து உருமியது. இருந்தும் தனது மகளை காப்பாற்றும் நோக்கில் சிங்கத்தை விரட்டினார். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் சிறுமியை அங்கேயே விட்டு வெளியேறி சிங்கம் ஓடியது. ஆனால் கடித்துக் குதறப்பட்ட ராஹ்லின் சடலம் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டது.
கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில், போலீசாரும் வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, இரண்டு சிங்கங்களும் ஒரு குட்டியும் கடந்த மூன்று நாட்களாக இப்பகுதியில் சுற்றித் திரிந்து வருகின்றன. சிறுமியை கொன்ற சிங்கத்தை பிடிக்க வனத்துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
The post தண்ணீர் பிடிக்க சென்ற போது 13 வயது சிறுமியை கவ்விக் கொன்ற சிங்கம்: குஜராத்தில் பயங்கரம் appeared first on Dinakaran.