×

போடி அருகே ரூ.1 கோடி மதிப்பிலான மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணி ஸ்பீடு

*பொதுமக்கள் மகிழ்ச்சி

போடி : போடி அருகே கிருஷ்ணா நகர் மேற்குபுரத்தில் ரூ.15 கோடி நிதியில் குடிநீர் புதிய அபிவிருத்தி பணிகளில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல் நிலைத் தொட்டி பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.போடி அருகே மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் மேல சொக்கநாதபுரம், கீழசொக்கநாதபுரம், தர்மத்துப்பட்டி, கரட்டுப்பட்டி, வினோபாஜி காலனி, முதல்வர்காலனி, கிருஷ்ணாநகர், மகாலட்சுமிநகர், முத்தம்மாள்நகர், காட்டுப்பட்டி, ரெங்கநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு உட்கிடை பகுதிகளும் உள்ளது. இங்கு சுமார் 16 ஆயிரத்திற்கும் மேற் பட்ட பொதுமக்கள் வசிக் கின்றனர். விவசாயம், விவசாயக் கூலி இதர குடிசை தொழில்கள் என செய்து வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.

இப்பகுதி மக்களுக்கு அடிப்ப டை வசதிகளில் ஒன்றான உயிரை காக்கும் குடிநீர் போடி அருகே உப்புக்கோட்டை குண்டல் நாயக்கன்பட்டி பெரியாற்றுக்குள் உறைகிணறு அமைத்தும், கரட்டுப்பட்டியிலிருந்து 5 வது கிலோ மீட்டரில் உள் ள மங்கள கோம்பை பகுதியில் இருக்கும் ஊற்று நீரையும் உறிஞ்சி சேகரித்து இரண்டையும் சேர்ந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் விநியோகம் செய்யப்படுகிறது. இருந்த போதிலும் பொதுமக்கள் அதிகளவில் குடியிருப்புகள் என தொடர்ந்து அதிகரித்து வருவதால் குடிநீர் தேவை அதிகரித்தது.

தற்போது பற்றாக்குறை நீடித்து வருவதால் பொதுமக்கள் வளர்ச்சிக்கேற்ப குடிநீர் போதுமானதாக குறைவாக இருப்பதால், மேலும் வரத்தை அதிகரித்திடும் விதமாக சரி கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து மேலும் பெரியாற்றுக்குள் இரு உறை கிணறுகள் அமைப்பது என்றும், ஏற்கனவே ஒரு பதியில் உள்ள மங்களக்கோம்பை பகுதியில் மேலும் தடுப்பணையை மெகா அளவில் மாற்றி உருவாக்கி அதில் ஊற்று நீரை கூடுதலாக தேக்குவது உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் அமைப்புகள் உருவாக்கி குடிநீர் அபிவிருத்தி திட்டத்திற்கு அனுமதி கோரி அரசிடம் அறிக்கையாக தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டது.

அதனை பரிசீலனைக்கு எடுத்து அரசு பொதுமக்களின் நலன் கருதி ஏற்று கொண்டு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி தமிழக அரசு அம்ருத் 2.0 திட்டத்தின் வாயிலாக ஒதுக்கிய ரூ.15 கோடியால் கூடுதல் குடிநீர் அபிவிருத்தி செய்து பொது மக்களுக்கு போதுமான குடிநீர் பற்றாக்குறையை மேம்படுத்தி சரி செய்து கொள்ள உத்தரவிட்டது.

அதனையடுத்து கரட்டுபட்டி பகுதியில் தலைமை நீரேற்று சுத்திகரிப்பு நிலையம் மேல் நிலை தொட்டிகள், புதிய கூடுதல் குழாய்கள் பதிப்பு, குண்டல் நாயக்கன்பட்டி முல்லை பெ ரியாற்றுக்குள் கூடுதல் உறை கிணறுகள் அமைக்கும் பணிகளும், மேலும் குண்டல்நாயக்கன்பட்டியில் இருந்து மீனாட்சிபுரம் வழியாக போடி மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி உட்பட 56 கிலோ மீட்டர் தூரம் மற்றும் சுற்றளவில் குழாய்கள் பதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது.

அதேபோல் கிருஷ்ண நகர் மேற்கு பகுதி மகாலட்சுமி பகுதியில் கூடுதல் தண்ணீரை தேக்கும் விதமாக ரூ.1 கோடி மதிப்பீட்டில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்டுமான பணிகள் தீவிரமாக கடந்த நடைபெற்று வந்தது.

இதற்கிடையில் அந்த மேல்நிலை தொட்டி கட்டுவதற்கான ஏலம் எடுத்த ஏலதாரர் வெவ்வேறு பணிகளால் காரணம் காட்டி இப்பணிகளை பாதியில் விட்டு சென்றுவிட்டார். அதனால் கடந்த வருடமாக அப்படியே எலும்பு கூடு போல் மேல் நிலைத் தொட்டி எவ்வித முன்னேற்றம் இல்லாமல் முடங்கி பொருட்காட்சியாக நின்றது.

இந்நிலையில் இந்த மேல் நிலைத் தொட்டி கட்டப்படாமல் பாதியில் ஒரு வருடமாக நிற்பதால், ஏற்கனவே பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நிறைவடைந்த திட்டத்தின் வாயிலாக செயல்படுத்துவதில் பெரும் தாமதம் ஏற்ப ட்டுள்ளது.

இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த செப்.3ம் தேதி படத்துடன் செய்தி வெளியிட்டது. அதனை தொடர்ந்தும் பல முறை தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இரண்டா வது முறை வெளியிட்ட நேரத்தில் பாதியில் விட்டுச்சென்ற ஏலதாரர் மறுபடியும் மேல்நி லைத் தொட்டியில் ஆர்சி அமைப்பதற்காக பலகைகள் அடைந்து அதையும் அறை குறையாக விட்டு விட்டன.

இதனை அடுத்து பேரூராட்சி நி ர்வாகம் அந்த ஏலதாரருக்கு ஏற்கனவே பாதி பணிக்கு நிறுத் தியிருந்த நிதியை ரிலீஸ் செய்து கொடுத்தனர்.பின்னர் அதே ஏலதாரர் மறு படியும் கடந்த சில நாட்களாக மேல் நிலைத் தொட்டி பணியை முடித்தே தர வேண்டும் என கட்டுமான தொழிலாளர்களை அனுப்பி உயர்ந்த தொட்டியில் உடனடியாக பலகைகள் அடைப்பதற்கு பணிகள் துவங்கி, தற்போது ஸ்பீடாக நடைபெற்று வருகிறது.

இன்னும் ஒரு சில நாட்களில் மேல்நிலைத் தொட்டிக்கு ஆர்சி போடும் பணிக்கான ஆயுத்த பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. தினகரன் செய்தியின் எதிரொலியால் பணிகள் மீண்டும் முடிக்கும் அளவிற்கு துவங்கியிருப்பதால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் கேட்டபோது, ‘‘ஏற்கனவே ஏலம் எடுத்த ஏலதாரர் சில பல்வேறு பணிகளின் சுமையால் வேறு பகுதிக்கு சென்று விட்டார். பில்லும் ரிலீஸ் செய்து விட்டதால் அதே ஏலதாரர் பலகை அடைக்கும் பணிகள் துவங்கியுள்ளனர்’’ என்றனர்.

The post போடி அருகே ரூ.1 கோடி மதிப்பிலான மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணி ஸ்பீடு appeared first on Dinakaran.

Tags : Bodi ,Krishna Nagar West ,Dinakaran ,
× RELATED ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி...