இது பற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பத்துக்கு மேற்பட்ட விசைப்படகுகள் மூலமும் தேடும் பணி தொடரப்பட்டது.
ஆனால் யாரும் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திண்டிவனம்- மரக்காணம் சாலையில் பக்கிங்காம் கால்வாயில் உள்ள மேம்பாலத்தில் திண்டிவனம் அதிமுக எம்எல்ஏ அர்ஜுனன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனை பார்த்த மரக்காணம் போலீசார் அவர்களை சமாதானம் செய்து சாலை மறியலை கைவிடும்படி செய்தனர்.
தொடர்ந்து புதுவை- சென்னை இசிஆர் சாலையில் மரக்காணம் பூமிஈஸ்வரர் கோயில் பேருந்து நிறுத்தம் பகுதியில் எம்எல்ஏ அர்ஜுனன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் நடத்தினர். மரக்காணம் இன்ஸ்பெக்டர் பாபு சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது எம்எல்ஏ நீரில் மூழ்கி மாயமான இளைஞர்களை கண்டுபிடிக்க பேரிடர் மீட்டுக்குழுவை வர வைக்க வேண்டும். வட்டாட்சியர் சம்பவ இடத்திற்கு வரவேண்டும் என கோரிக்கை வைத்தார். இது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உத்தரவாதம் அளித்ததால் மறியல் கைவிடப்பட்டது.
The post சகோதரர்கள் 3 பேர் கால்வாயில் மூழ்கி மாயம் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் appeared first on Dinakaran.