திருத்தணி : திருத்தணி அருகே மணவூரில் சரக்கு வாகனத்தில் 2 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரேஷன் அரிசி கடத்திய சலீம் அக்பர் அலி (29), பாலாஜி (18) கைது செய்யப்பட்டு 2 டன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.