இந்நிலையில் உத்தப்பா வெளியிட்டுள்ள அறிக்கை: சென்டாரஸ் லைப்ஸ்டைல் பிராண்ட் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு நான் கடன் தந்துள்ளதால் அவற்றின் இயக்குனராக நியமிக்கப்பட்டேன். மற்றபடி எனக்கும் அந்த நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை. தொழில் முறை கிரிக்கெட் வீரர், டிவி தொகுப்பாளர் போன்ற பணிகளில் மட்டுமே தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்.
என்னிடம் கடன் பெற்ற நிறுவனங்களின் தவறான செயல்பாட்டால் எனக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. அந்த நிறுவனங்களின் இயக்குனர் பதவியை சில ஆண்டுகளுக்கு முன்பே நான் ராஜினாமா செய்து விட்டேன். இது தொடர்பாக எனது வழக்கறிஞர்கள் தக்க பதில் அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post கைது வாரண்ட் விவகாரம்: எனக்கு தொடர்பில்லை; ராபின் உத்தப்பா விளக்கம் appeared first on Dinakaran.