இதனிடையே, காதல் விவகாரத்தில், பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் இடையே நேற்று மாலை பள்ளி முன் மோதல் ஏற்பட்டுள்ளது. வேப்பிலைப்பட்டி மற்றும் திருமனூர் கிராமங்களின் இரு சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் கோஷ்டியாக மோதிக் கொண்டனர். பின்னர் இரு கோஷ்டியினரும் தங்கள் ஊர்களுக்கு சென்று முன்னாள் மாணவர்களை அழைத்து வந்துள்ளனர். தொடர்ந்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் சிலர் காயம் அடைந்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தினால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து வாழப்பாடி டிஎஸ்பி ஆனந்த் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் இரு கிராமங்களைச் சேர்ந்த சமூகத்தினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உள்ளதால் கருமந்துறை, ஏத்தாப்பூர் பகுதிகளில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து இரு கிராமங்களிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
The post காதல் விவகாரத்தில் மாணவர்கள் மோதல்: இரு கிராமங்களில் பதற்றம்; போலீசார் குவிப்பு appeared first on Dinakaran.