ராகுல்காந்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பங்கஜ் பதக் என்ற நபர், பரேலி மாவட்ட நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், ‘ராகுல் காந்தியின் கருத்துக்கள் நாட்டில் அமைதியின்மை, சமூகங்களுக்கு இடையிலான பிளவு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே இவ்விசயத்தில் நீதித்துறை தலையீட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், வரும் ஜனவரி 7ம் தேதி ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகி, தனது தரப்பு விளக்கத்தை தர வேண்டும் என்று உத்தரவிட்டது.
முன்னதாக உத்தரபிரதேசத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், இதே மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனால் மனுதாரர், பரேலி மாவட்ட நீதிமன்றத்தை அணுகியதாகவும், ராகுல் காந்திக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதாகவும் மனுதாரர் கூறினார்.
The post சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த புகார் மனு; ராகுல்காந்தி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.