அந்த காட்சியை பார்ப்பவர் யாராக இருந்தாலும் அந்த நொடியே சுசீலாவின் அற்புத திறனை உடனே புரிந்து கொள்வர். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் அந்த வீடியோவை கண்டு மெய் சிலிர்த்துள்ளார். உடனே அந்த வீடியோவை தன் டிவிட் பக்கத்தில் பகிர்ந்ததோடு, முன்னாள் கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானையும் ‘டேக்’ செய்துள்ளார். ‘என்ன ஒரு திறமை? அனாயசமான பந்து வீச்சு. பார்க்கவே பிரமிப்பாக உள்ளது. சுசீலாவின் பந்து வீச்சு, உங்கள் சாயலில் உள்ளது. நீங்களும் பார்த்தீர்களா? என, ஜாகீர் கானிடம் சச்சின் கேள்வி எழுப்பி உள்ளார்.
சச்சினின் பதிவுக்கு பதில் கூறியுள்ள ஜாகீர், ‘ சரியாக சொன்னீர்கள். இதற்கு மேல் நான் சொல்வதற்கு ஏதுமில்லை. அவரது திறன் என்னை திகைக்க வைத்துள்ளது. எதிர்காலத்தில் சிறப்பான சாதனை புரிவார்’ எனத் தெரிவித்துள்ளார். இந்த இருவரின் டிவிட்கள் நெட்டிசன்கள் மத்தியில் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தியதோடு, சுசீலாவின் பந்து வீச்சு வீடியோவை லட்சக்கணக்கானோர் பகிர்ந்து வருகின்றனர்.
The post ஜாகீர் கானை போல் பந்து வீசும் சிறுமியின் சாகசம்: சச்சின் பரவசம்; வீடியோ வைரல் appeared first on Dinakaran.