சென்னை: தமிழ்நாடு அரசின் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பவன்குமார். ஜி.கிரியப்பனவர் வெளியிட்ட அறிவிப்பு: ஜெர்மன் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிவதற்க்கு பி1, பி2 நிலையில் ஜெர்மன் மொழி தேர்ச்சிப் பெற்று குறைந்தபட்சம் 6 மாதம் பணி அனுபவம் பெற்ற 38 வயதிற்கு உட்பட்ட, டிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு ஆரம்ப நிலையில் மாத சம்பளமாக சுமார் 2 லட்சம் வழங்கப்படும். எனவே, தகுதியுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 5ம் தேதிக்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: www.omcmanpower.tn.gov.in மற்றும் 044-22505886/ 63791 79200 என்ற எண்களின் அறிந்து கொள்ளலாம்.
The post ஜெர்மனியில் பணிபுரிய செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.