சென்னையில் நடைபெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்க கூட்டத்தில் பங்குபெற்று செய்தி மடலினை வெளியிட்டார் அமைச்சர் எ.வ. வேலு

சென்னை: பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு , சென்னை, ராஜா அண்ணாமலை புரம், செட்டிநாடு வித்தியாஸ்ரமம், குமார ராஜா முத்தையா அரங்கத்தில் நடைபெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்க கூட்டத்தில் பங்குபெற்று செய்தி மடலினை வெளியிட்டார்.

​பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு சென்னை, ராஜா அண்ணாமலை புரம், செட்டிநாடு வித்தியாஸ்ரமம், குமார ராஜா முத்தையா அரங்கத்தில் இன்று (21.12.2024) நடைபெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்க கூட்டத்தில் பங்குபெற்று செய்தி மடலினை வெளியிட்டார்.

​செய்தி மடலினை வெளியிட்டு அமைச்சர் விழாவில் பங்கேற்ற பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, தலைமைப் பொறியாளர்கள் பொறியாளர்கள் மற்றும் அனைத்து பொறியாளர்களை வரவேற்று விழா சிறப்புரையாற்றினார்கள்.

​அமைச்சர் உரையாற்றுகையில், 1857ல் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட துறை இப்பொதுப்பணித்துறை எனவும், சர் ஆர்தர் காட்டன் (Sir Arthur Cotton) முதல் தலைமைப் பொறியாளர் என தெரிவித்தார்.

​பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்கம் சமீபத்தில் உருவாக்கப்பட்டது. சங்க உறுப்பினர்களுக்கு சிறப்பாக சங்கம் செயல்பட சில ஆலோசனைகள் வழங்கினார்கள். அவற்றில்,

​பொறியாளர்களிடையே ஒருமித்த மனப்பான்மை வளர்த்தல்

​பொறியாளர்களின் சேவை மனப்பான்மையை ஊக்குவித்து பாதுகாத்தல்

​புதிய உதவிப் பொறியாளர்களிடத்தில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி அதன்மூலம் அவர்களின் மனவலிமையை ஊக்குவித்தல்.

​பொறியாளர்களின் அறிவினை மேம்படுத்த (Update) தொழில்நுட்ப கையேடுகள் (Technical Publication) மற்றும் மாதாந்திர இதழ் வெளியிட வேண்டும்.

​பொறியாளர்களின் திறனை வளப்படுத்த தொழில்நுட்ப விரிவுரைகள் (Technical Lectures), கருத்தரங்குகள் (Seminars), மாநாடு (Conference) ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும்.

​மேலும் மனித உறவுகளை வளர்ப்படுத்த தேவையான கலாச்சார நடவடிக்கைகள் (Cultural Activities), சுற்றுலா (Tour) ஆகியவற்றை ஏற்பாடு செய்தல்.

​துறையினை மென்மேலும் வலுப்படுத்தி வளர்ச்சி அடைய தேவையான ஆக்கப்பூர்வமான கருத்துருக்களை (Proposal) எடுத்து வைத்தல்.

​ஆட்சி நிர்வாகம், சமுதாயத்தில் பொறியாளர்களுக்கு அவரவர் தகுதி, நிலைக்கேற்ப உரிய அந்தஸ்து கிடைக்க வழிவகை செய்தல்.

​துறை மற்றும் சமுதாயத்தில் பொறியாளர்களின் தனித்துவமான, சிறப்பான சேவையினை பாராட்டும் விதம் உரிய விருதுகள் கிடைக்க உழைக்க வேண்டும்.

​துறை மற்றும் பொறியாளர்களின் நலன் கருதி எடுக்க வேண்டிய முக்கியமான முடிவுகளை ஆண்டுக்கொருமுறை பொதுக்குழுக் கூட்டம் (General Body), ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செயற்குழுக் கூட்டம், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மைய செயற்குழு கூட்டம் நடத்தி உறுப்பினர்களின் விருப்பம் கேட்டறிந்து அதை நிறைவேற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.

​தனிமரம் தோப்பு ஆகாது என்பது ஒரு பழமொழி என்பதை குறிப்பிட்ட அமைச்சர் , சங்கம் என்பது தனித்தனி மனிதர்களின் குரலை ஒருங்கிணைக்க கூடிய பணியை செவ்வனே செய்து வருகிறது.

​ஐந்து விரலும் ஒன்று சேரும் போதுதான் ஓசை எழும், அதைப்போல தான் அனைவரும் ஒன்று சேரும் போதுதான் ஓசை எனும், அவர்களுடைய கோரிக்கைகளை வலுப்பெறும். எனவே அனைவரும் ஒற்றுமையாக இருந்து சங்கத்தினை வழிநடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

​பொதுப்பணித்துறை பொறியாளர் சங்க கூட்டத்தில், பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மங்கத் ராம் சர்மா, முதன்மை தலைமைப் பொறியாளர் K.P. சத்தியமூர்த்தி, மண்டல தலைமைப் பொறியார்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற் பொறியாளர்கள் மற்றும் பொறியாளர்கள் மற்றும் இதர அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னையில் நடைபெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்க கூட்டத்தில் பங்குபெற்று செய்தி மடலினை வெளியிட்டார் அமைச்சர் எ.வ. வேலு appeared first on Dinakaran.

Related Stories: