மழைநீர் வெளியேற்றும் பணி

தூத்துக்குடி, டிச. 21: தூத்துக்குடி பண்டாரம்பட்டி, ஆதிபராசக்தி நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை சண்முகையா எம்எல்ஏ பார்வையிட்டார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி 1வது வார்டு பண்டாரம்பட்டி முள்ளிகுளம், சுப்பிரமணியபுரம், 2வது வார்டு ரஹ்மத்நகர், ராம்நகர், ஆதிபராசக்திநகர், மேற்கு மச்சாதுநகர், 3வது வார்டு ஹவுசிங் போர்டு, கேடிசி நகர் மற்றும் ஓம்சாந்தி நகர் ஆகிய பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியை சண்முகையா எம்எல்ஏ நேரில் பார்வையிட்டார். மழைநீரை விரைந்து வெளியேற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். இதில் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் முனீர்அகமது, உதவி ஆணையர் சுரேஷ்குமார், இளநிலை பொறியாளர் ராஜேஷ்கண்ணன், பிடிஓ ஐகோர்ட்ராஜா, மாவட்ட பிரதிநிதி பூவேஸ்நாதன், வட்ட செயலாளர்கள் வழக்கறிஞர் கார்த்திக், ராஜன், செயலாளர்கள் கமாலுதீன், குலாம் அலி, மகளிரணி பவுசியா அபுதாகீர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post மழைநீர் வெளியேற்றும் பணி appeared first on Dinakaran.

Related Stories: