2014ல் புதிய அனல் மின் நிலைய பணி தொடங்கப்பட்டது. ஒரே அலகில் 660 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய அதிநவீன அலகு அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் பல காரணங்களால் பணி முடங்கியது. இதனால் தனியார் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்த அரசு, கடந்த 2019 டிசம்பர் மாதம் புதிய அனல் மின் நிலைய விரிவாக்க திட்ட பணியை மேற்கொள்ள கூடுதல் திட்ட மதிப்புடன் மறு ஒப்பந்த அடிப்படையில் வேறொரு தனியார் நிறுவனத்திற்கு பணி செய்ய உத்தரவு வழங்கியது. அந்த நிறுவனமும் திட்ட பணியை தொடங்கவில்லை.
இதையடுத்து அவர்களது பணி உத்தரவையும் 2021 ஏப்ரல் 23ம் தேதி மின் பகிர்மான கழகம் ரத்து செய்தது. இதை தொடர்ந்து 3 ஆண்டுகளாக புதிய அனல் மின் நிலைய திட்ட விரிவாக்க பணி முடங்கியது. இந்நிலையில் புதிய அனல் மின் திட்டத்தை மீண்டும் தொடங்குவது குறித்து மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பொதுமக்களின் கருத்துகேட்பு கூட்டம் எர்ணாவூரில், மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தலைமையில் நேற்று நடந்தது. மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் வாசுதேவன், கேசவமூர்த்தி முன்னிலை வகித்தனர்.
இதில் கலந்துகொண்ட கே.பி.சங்கர் எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, முன்னாள் நகராட்சி தலைவர் திருசங்கு மற்றும் கிராம நிர்வாகிகள். பொதுமக்கள் திட்டத்தை செயல்படுத்தினால் வேலைவாய்ப்பு கிடைக்கும். சுற்றுவட்டார மக்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய முடியும், தொழில் வளம் பெருகும், எனவே திட்டத்தை செயல்படுத்த வேண்டும். உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றனர். அப்போது, அனல் மின் நிலையத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் விளக்க வேண்டும் என ஒரு தரப்பினர் தெரிவித்தனர். இதனால் திட்டத்தை ஆதரித்தவர் களுக்கும், எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். முடிவில் மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘‘கருத்துகேட்பு கூட்டத்தில், பொதுமக்கள் தெரிவித்த கருத்துகளை பட்டியலிட்டு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்,’’ என்றனர்.
The post எண்ணூரில் புதிய அனல்மின்நிலைய விரிவாக்க திட்டம் கருத்துக்கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் தள்ளுமுள்ளு appeared first on Dinakaran.