கொடநாடு கொலை வழக்கு எதிர்தரப்பு சாட்சிகளிடம் விசாரணை எப்போது? நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர்கள் விளக்கம்

ஊட்டி: கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் எதிர்தரப்பு சாட்சி விசாரணை எப்போது என்பது குறித்து அரசு வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் விளக்கம் அளித்தனர். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மாவட்ட நீதிபதி முரளிதரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜித்தின் ஜாய் ஆஜரானார். அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் மற்றும் எதிர்தரப்பு வழக்கறிஞர் விஜயன், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையில் போலீசாரும் ஆஜராகினர். வழக்கு விசாரணை குறித்து நீதிபதி கேட்டறிந்தார்.

நீதிபதியிடம் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் விசாரணை நிலவரம் குறித்து தெரிவித்தனர். ‘‘எதிர் தரப்பு சாட்சிகள் இடையே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அரசு தரப்பு சார்பில் புலன் விசாரணை நடந்து வருகிறது. அந்த விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்த பின்னரே எதிர் தரப்பு சாட்சிகள் இடையே விசாரணை மேற்கொள்ள முடியும்’’ என நீதிபதியிடம் அவர்கள் கூறினர். இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி மாதம் 24ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

The post கொடநாடு கொலை வழக்கு எதிர்தரப்பு சாட்சிகளிடம் விசாரணை எப்போது? நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர்கள் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: