டெல்லி: ரயில் பயணிகள் R-வாலெட் பயன்படுத்தி UTS மொபைல் ஆப் அல்லது ATVM மூலம் டிக்கெட் எடுத்தால் 3% கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், R-வாலெட்டை ரீசார்ஜ் செய்யும்போது வழங்கப்பட்ட 3% சலுகை, இப்போது டிக்கெட் எடுக்கும்போது வழங்கப்படுகிறது. டிக்கெட் பெறுவதற்காக நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க, ஆப் மூலம் எளிதில் டிக்கெட் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. UTS மொபைல் செயலியில் உள்ள R-வாலெட் அல்லது ATVM மூலம் டிக்கெட் வாங்குவோரை ஊக்குவிக்கும் விதமாக சலுகை அறிவிக்கப்பட்டது.
The post R-வாலெட் பயன்படுத்தி டிக்கெட் எடுத்தால் 3% சலுகை..!! appeared first on Dinakaran.