கார்த்திகை நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்…

வெப்பமான நட்சத்திரம் ஒன்று உண்டென்றால் மறவாமல் கார்த்திகை நட்சத்திரத்தை குறிப்பிடலாம். கார்த்திகை என்பது ஆதவனின் நட்சத்திரமாக இருந்தாலும் சூரியன் இழந்த பலத்தை மீண்டும் கார்த்திகையிலிருந்துதான் பெறுகிறது என்பதை காலத்தே நாம் உணரலாம். ஆடி பிறந்து ஒரு குழி அவரை போட்டால் கார்த்திகை பிறந்தால் ஒரு சட்டி கறி ஆகும் என்பது பழமொழியாக உள்ளது. சிவ பெருமானுக்கு தொடர்புடைய நட்சத்திரம் என்றால் அது கார்த்திகைதான். காலம் வளர்க்கும் கார்த்திகை கொஞ்சம் வேகம்தான். ஆனால், மோதிக் கொள்ளக்கூடாது. முருகப் பெருமானுக்கு கார்த்திகேயன் (கார்த்திகையில் பிறந்த ஐயன்) என்ற பெயரும் உண்டு.

காலபுருஷனின் முதலாம் வீடான மேஷ ராசியில் உள்ள 3வது நட்சத்திரம் கார்த்திகை நட்சத்திரம். ராசி மண்டலத்தில் ஒரு உடைப்பட்ட முதல் நட்சத்திரமாக உள்ளது. அவ்வாறே உடைபட்டு மேஷத்திலும் ரிஷபத்திலும் பரிணமிக்கிறது.

கார்த்திகை என்பதில் கார் என்பதற்கு மழை தரும் மேகம் என்று பொருள். திகை என்பதை முடிவு என்று பொருள் தருகிறது. அதாவது, மழை முடிவு பெறும் காலம் என்றும் பொருளாக கொள்ளலாம்.

கார்த்திகை நட்சத்திரத்தை ஆரல், அழல்,அங்கி, அளகு, இறால், அறுமீன், ஆவி. கிருத்திகை என்று அழைப்பர். கிருத்திகை நட்சத்திர விரதம் நன்மை அளிக்கும்.

கார்த்திகை நட்சத்திர விருட்சம்: அத்தி மரம்.
கார்த்திகை நட்சத்திர யோனி: பெண் ஆடு.
கார்த்திகை நட்சத்திர பட்சி: மயில்,காகம்.
கார்த்திகை நட்சத்திர மலர்: செவ்வரளி.
கார்த்திகை நட்சத்திர சின்னம்: தீ சுவாலை.
கார்த்திகை நட்சத்திர தேவதை: சிவந்த நிறம் கொண்ட அக்னி தேவன் ஆவார். இவரே ஹோமத்தில் இருப்பதற்கான முக்கிய தேவதையாக உள்ளார்.
கார்த்திகை நட்சத்திர கிரகம்: சூரியன்.
கார்த்திகை பிறந்த கணம்: ராட்சச கணமாக உள்ளார். வேகமாகவும் உக்ரமாகவும் உள்ளதால்.

கார்த்திகை நட்சத்திர தெய்வம்

கார்த்திகை நட்சத்திரத்திற்குரிய தேவதை அக்னி பகவான். இவர் ஒரு முறை துர்வாச முனிவர் நூறாண்டுகளுக்கு மேல் செய்த யாகத்தால் நெய்யினை உணவாக உட்கொண்டு நோயிற்கு ஆளானார். அந்த நோயை தீர்க்க மூலிகை உள்ள வனங்களைத் தேடி நடந்தார். யமுனை ஆற்றங்கரையில் ஒரு மூலிகை வனம் இருந்தது. அதனை உட்கொள்ளும் சமயத்தில் மழை வந்து அக்னி பகவானைத் தடுத்தது. என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார். அந்த வனம் இந்திரனின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதை உணர்ந்து கொண்டார். பின்பு, ஒரு நாள் அங்கு அந்தணர் வேடம் பூண்டு கிருஷ்ணரிடம் எனக்கு உதவ வேண்டும் என வேண்டினார். கிருஷ்ணர் அக்னி தேனே ஏன் இந்த மாறுவேடம் என வினவவினார். விவரம் அறிந்த கிருஷ்ணர். ‘‘அக்னி தேவனே, நானும் அர்ச்சுனனும் உதவுகிறோம்’’. எங்களுக்கு வேண்டியதை செய்விக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கவே, அந்த வேண்டுகோளுக்கு இணங்கினார். அர்ச்சுனன் வில்லினால் அம்புகள் எய்தி மழை வராமல் அம்புகளால் கூடுகட்டி காத்தான். 21 நாட்களே அவகாசம் என கிருஷ்ணர் கூறியிருந்தார். அந்த நாட்களே அக்னி நட்சத்திரமாக ஒவ்வொரு வருடமும் இருக்கிறது. அச்சமயத்தில சூரியன் கிருத்திகை நட்சத்திரத்தில் பயணிக்கிறார் என்பதே புராணம்.

பொதுப் பலன்கள்

இவர்களின் நட்சத்திரக்காரர்கள் சூரியனும் செவ்வாயும் இணைந்து இருப்பதால் ரஜோ குணம் உடையவர்களாக இருப்பார்கள். மிகுந்த வேகம் உடையவர்கள் என்பதற்கு சான்று உங்கள் அனுபவங்களே. இந்த நட்சத்திரத்திலோ அல்லது மாதத்திலோ பிறந்தவர்கள் கார்த்திக் அல்லது கார்த்திகேயன் என்ற பெயர்கள் அதிகமாக இருக்கும்.

அதீத வேகம் ஆபத்து என்பதை உணராதவர்கள். நிதானமாக செயல்பட்டால் வெற்றி இவர்களுக்கே. இவர்கள் அனைவருடனும் நட்புடன் பழகும் பண்பை கொண்டவர்கள். அடிக்கடி தன் செயல்பாடுகளை மாற்றிக் கொள்வார்கள்.
இவர்களின் உடலமைப்பு பெரும்பாலும் ஒல்லிய தேகம் உடையவர்களாகவும் எப்பொழுதும் தேகம் வெப்பமுடைய தனலாக காணப்படும்.

தொழில்

தொழில் மற்றும் உத்யோகத்தில் வேகமாகவும் லாவகமாகவும் செயல்படுவதில் திறமைசாலிகள். எப்பொழுதும் தங்களுக்கு ஓர் இடம் வேண்டுமென்று அதனை எப்படி அடையாளம் என்பதை தெளிவாக தெரிந்தும் அறிந்து வைத்திருப்பார்கள். அதனை அடைவார்கள்.

ஆரோக்கியம்

உஷ்ண உடம்பு ஆகயைால், சில நேரங்களில் என்ன பிணி என்றே தெரியாவண்ணம் இருக்கும். மேலும், ஆரோக்கியத்தில் இவர்கள் கவனமில்லாமல் இருப்பது திடீர் சுகமின்மையை உருவாக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கார்த்திகை நட்சத்திரத்திற்கான வேதை நட்சத்திரம்

வேதை என்றால் தொந்தரவு மற்றும் இடஞ்சல்கள் தரும் நட்சத்திரமாகும். கார்த்திகை நட்சத்திரத்திற்கு விசாகம் வேதை நட்சத்திரமாகும். எனவே, விசாகம் நடசத்திர நாளில் கவனமாக இருப்பது அவசியம் மேலும், அன்று புதிய விஷயங்கள் செய்யாமல் இருப்பது நன்று.

பரிகாரம்

கார்த்திகை நட்திரத்திற்கு செந்தில் ஆண்டவரை செவ்வாய் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வழிபடுது நன்மை தரும்.அத்தி மரம் வாங்கி வனங்களிலோ அல்லது கோயில் வளாகத்திலோ நடுவது இவர்களுக்கு நன்மை பயக்கும்.

The post கார்த்திகை நட்சத்திரங்கள்; பலன்கள்; பரிகாரங்கள்… appeared first on Dinakaran.

Related Stories: