புதுக்கோட்டை,டிச.20: புதுக்கோட்டையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து மாணவர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாராளுமன்றத்தில் அண்ணல் அம்பேத்கர் குறித்து அவதூராக பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், இந்திய மாணவர் சங்கமும் இணைந்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைத்தியது.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் மாகதீர், மாணவர் சங்க மாவட்டச் செயலளார் வசந்தகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார். ஓய்வூதியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் அ.மணவாளன் போராட்டத்தை ஆதரித்துப் பேசினார்.
The post ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து மாணவர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.