மேட்டூர்: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் உள்ள நான்கு அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரமும், 2வது பிரிவில் 600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. 2வது பிரிவில் கடந்த 17ம்தேதி கொதிகலன் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதால் மின் உற்பத்தி தடைபட்டது. கொதிகலன் குழாய் வெடிப்பு சரி செய்யப்பட்டதையடுத்து, நேற்று இரவு முதல் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கப்பட்டது.
The post மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 2வது அலகில் மீண்டும் மின் உற்பத்தி appeared first on Dinakaran.