அமித் ஷா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநிலங்களவை தலைவரிடம் காங்கிரஸ் எம்பி மல்லிகார்ஜூன கார்கே நோட்டீஸ் கொடுத்துள்ளார். அதில் கடந்த 17ம் தேதி, மாநிலங்களவையில் நடந்த விவாதத்திற்கு பதிலளித்த ஷா, அம்பேத்கரை அவமதிப்பு மற்றும் அவதூறு” என்று குறிப்பிட்டார்.
சபை உறுப்பினர்கள் முன்னிலையில் ஏதேனும் தவறான நடத்தை அல்லது பிரதிபலிப்புகளை வெளியிடுவது மற்றும் அவதூறான அறிக்கைகளை வெளியிடுவது ஆகியவை உரிமை மீறல் மற்றும் அவையை அவமதிப்பு செய்வதாகும். உள்துறை அமைச்சரின் கருத்துகளின் வார்த்தைகளும் தொனி,நையாண்டி செய்யும் விதமாகவும், மோசமான நோக்கமும் கொண்டது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அவர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
The post அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேச்சு: உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: மாநிலங்களவை தலைவரிடம் எதிர்க்கட்சி தலைவர் கார்கே தாக்கல் appeared first on Dinakaran.