அம்பேத்கரை அவமதிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஏற்க முடியாது: ராமதாஸ் கண்டனம்

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அம்பேத்கர் பற்றி அமித்ஷா தவறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அம்பேத்கர் விமர்சனங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். அவர் அரசியல் கட்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். அவரை யார் தவறாக பேசினாலும் பாமகவினர் அமைதியாக இருக்க மாட்டோம். அனைத்து கட்சிகளும் அம்பேத்கரை போற்றி தான் ஆக வேண்டும்.

அவரை கொச்சைப்படுத்துவதையோ, அவமதிப்பதையோ ஏற்க முடியாது. ஒரே நாளில் 7அம்பேத்கர் சிலைகளை நான் திறந்தேன்.  அம்பேத்கர் இல்லை என்றால் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்திருக்காது. அம்பேத்கரை விமர்சிப்பது யாராக இருந்தாலும் ஏற்க முடியாது. ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தப்பட்டால் ஒரு மாநிலத்தில் ஆட்சி கவிழும்போது அந்த ஆட்சி சில மாதங்கள் மட்டுமே இருக்கும். இதை பாமக ஏற்காது. இவ்வாறு அவர் கூறினார்.

The post அம்பேத்கரை அவமதிப்பவர்கள் யாராக இருந்தாலும் ஏற்க முடியாது: ராமதாஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: