இளம்பெண்ணை கொன்ற சிறுத்தையை பிடிக்க தீவிரம்

வேலூர்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் ஊராட்சி துருவம் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம்(70), விவசாயி. இவரது மனைவி வளர்மதி. இவர்களுக்கு 5 மகள்கள். இதில் 4 மகள்களுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், இளங்கலை வணிகவியல் பட்டதாரியான 5வது மகள் அஞ்சலி(22), நேற்று முன்தினம் மாலை வீட்டின் பின்புறம் உள்ள வனப்பகுதிக்கு சென்றார்.

அப்போது அங்கு வந்த சிறுத்தை அஞ்சலியை கடித்து குதறி கொன்றது. இதை தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க நேற்று காலை குடியாத்தம் வன அலுவலர் தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவினர் அங்குள்ள காப்பு காட்டில், வனவிலங்குகளை கண்காணிக்கும் கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். மேலும் அதிநவீன டிரோன் கேமரா மூலமும் தீவிரமாக சிறுத்தையை கண்காணிக்கின்றனர். கூண்டு வைத்து பிடிக்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது.

The post இளம்பெண்ணை கொன்ற சிறுத்தையை பிடிக்க தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: