இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து

புதுடெல்லி: இங்கிலாந்து மன்னர் சார்லசுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அவர் தெரிவித்தார். இங்கிலாந்து மற்றும் இந்தியா உறவு குறித்து பிரதமர் மோடி நேற்று இங்கிலாந்து மன்னர் சார்லசுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாடுகள் இடையிலான வரலாற்று தொடர்பு குறித்தும், பல்வேறு துறைகளில் இருநாடுகள் இடையே உள்ள ஆழமான ஒத்துழைப்பு குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவதை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் நீண்டகாலமாக தன்னை ஈடுபடுத்தி, திட்டங்களை செயல்படுத்தி வரும் மன்னர் சார்லசை பாராட்டிய பிரதமர் மோடி, பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது மற்றும் பசுமை வளர்ச்சியை மேம்படுத்துதல் உள்ளிட்ட இந்தியாவின் முன்முயற்சிகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கினார். அதை தொடர்ந்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கான பண்டிகை வாழ்த்துக்களையும் இருவரும் பரிமாறிக்கொண்டனர். அப்போது மன்னர் சார்லசின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக பிரதமர் மோடி தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.

The post இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: