பிரதமர் மோடியின் கருத்தைத் தான் அமித்ஷா கூறியிருக்கிறார். நாட்டின் தட்ப வெப்ப நிலையை புரியாமல் அம்பேத்கரை, அமித்ஷா இழிவுப்படுத்தி இருக்கிறார். அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சுக்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். ஜனநாயகத்தில் பிரதமர் மோடிக்கு நம்பிக்கை இருந்தால், குறைந்தபட்சம் 6 மாதங்களாவது அமித்ஷாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். அதுதான் தார்மீக ரீதியாக அவர் மக்களை மதிப்பதற்கான அடையாளம். பாஜவினர் மதத்தின் பெயரால் இந்தியாவில் அரசியல் செய்யலாம் என்று நினைக்கின்றனர். மதத்துக்கு எதிராக அம்பேத்கரின் கருத்துகள் அமைந்திருக்கிறது என்ற காரணத்தால், அவரை அழிக்க பாஜவினர் எண்ணுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
The post அமித்ஷாவை அமைச்சரவையில் இருந்து 6 மாதங்களாவது நீக்க வேண்டும்: ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.