8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப ஆணை

சென்னை: சத்துணவு திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்திட 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது. சத்துணவுத் திட்டத்தின் கீழ் 8,997 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை மாதம் ரூ.3,000/- வீதம் தொகுப்பூதியத்தில் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நியமனம் செய்யப்படும் பணியாளர்களிள், 12 மாதங்கள் திருப்திகரமாக பணி முடிக்கும் தகுதியானவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும். சிறப்பு கால முறை ஊதிய (STS) நிலை -1 (ரூ.3000-9000)) வழங்கப்பட வேண்டும். தொகுப்பூதிய சமையல் உதவியாளர் பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10-ஆம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் சமையல் உதவியாளர்களை தொகுப்பூதியத்தில் நியமிக்க இணை இயக்குநர் நியமன அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுவதால் ஆண்டுக்கு அரசுக்கு ரூ.27 கோடி செலவு ஏற்படும்.

The post 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப ஆணை appeared first on Dinakaran.

Related Stories: