ஓட்டேரி பிரிக்ளின் சாலையில் பாதாள சாக்கடை பள்ளம்: பீதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்

பெரம்பூர்: சென்னை ஓட்டேரி 99வது வார்டுக்கு உட்பட்ட பிரிக்ளின் ரோடு திடீர் நகர் நுழைவு பகுதியில் கழிவு நீர் பாதாள சாக்கடை மூடி உடைந்துள்ளதால் பள்ளம் ஏற்பட்டு வாகனங்களில் செல்பவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஓட்டேரியில் இருந்து புரசைவாக்கம் செல்வதற்கு பிரிகிளின் ரோடு பகுதியை பெரும்பாலான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருவதால் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது.

மேலும் ஓட்டேரி சுடுகாடு செல்லும் வழியில் உள்ள நடைபாதைகள் உடைந்துள்ளதாலும் பாதாள சாக்கடை அருகே சிறிய பள்ளம் உள்ளதாலும் வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அடிக்கடி பாதாள சாக்கடை மூடியில் இருந்து கழிவு நீர் வெளியேறி வருவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே பாதாள சாக்கடை மூடியை சரிசெய்து வாகனங்கள் சிரமமின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஓட்டேரி பிரிக்ளின் சாலையில் பாதாள சாக்கடை பள்ளம்: பீதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் appeared first on Dinakaran.

Related Stories: