நன்மை தரும் ப்ளாக் டீ

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

கேமல்லியா சினசிஸ் என்று அழைக்கப்படும் இலைகளிலிருந்து ப்ளாக் டீ தயாரிக்கப்படுகின்றது. ப்ளாக் டீ அருந்துவது நம் உடலுக்கு மிக மிக நல்லது என்றே கூறப்படுகின்றது. இதனால் பல நோய்களில் இருந்து இலகுவாக வெளிவரலாம் என சொல்லப்படுகின்றது. அவ்வாறு கூறப்படும் ப்ளாக் டீயினை தினமும் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

* ப்ளாக் டீ அருந்துவதால் கொழுப்புப் பொருட்களை இதயத்தில் அண்ட விடாமல் தடுப்பதுடன், பல இதய நோய்களுக்கு தீர்வாகின்றது.

* இதில் உள்ள TF-2 என்ற பொருள் புற்றுநோய் செல்களை அடித்து துவம்சம் செய்வதோடு மட்டுமில்லாமல், பிற சாதாரண செல்கள் தாக்கப்படாமல் இருக்கவும் உதவி செய்கின்றது.

*இதில் உள்ள டானின் மற்றும் பாலிஃபீனால்கள் பற்சிதைவுக்குக் காரணமான பாக்டீரியாக்களை அழிக்கிறது.

* ப்ளாக் டீயை குடிப்பதால் வாய் துர்நாற்றமும் நீங்கி விடும். வாய் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஃபுளோரைடுகளை 2 கப் ப்ளாக் டீயில் நாம் பெற்று விடலாம்.

* ஒரு நாளுக்கு 4 கப் என்ற விகிதத்தில் ஒரு மாதம் தொடர்ந்து ப்ளாக் டீயை குடித்து வந்தால், நரம்பு மண்டலங்கள் வலுவாகிவிடும்.

* ஞாபக சக்தி அதிகரிக்கும், பார்க்கின்சன் வியாதி கூட சரியாகும். ப்ளாக் டீயில் உள்ள எல்-தியான் என்ற அமினோ அமிலம், கை நரம்புகளை வலுவாக்கிவிடும்.
* ப்ளாக் டீயில் உள்ள டானின் செரிமானத்திற்கு உதவி செய்கின்றது. மேலும் சிறுகுடல் எரிச்சலைக் குறைக்க உதவுகின்றது.

* எலும்புகளையும், எலும்புத் திசுக்களை வலுவாக்கவும் ப்ளாக் டீயில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் பயன்படுகின்றது.

* ப்ளாக் டீயில் உள்ள காப்ஃபைன் நம்மை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருப்பதுடன் மூளையின் செயல்பாடுகளும் அதிகரிக்கும்.

* சுவாச உறுப்புகள், இதயம் மற்றும் சிறுநீரகங்கள் ஆகியவற்றின் தூண்டல் வளர்ச்சியிலும் ப்ளாக் டீயில் உள்ள த்யோப்பைலின் உதவி செய்யும்.

* இதில் கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதால், அதை குடிக்கும் போது உடல் எடை தானாகவே குறையத் தொடங்கும். ப்ளாக் டீயை குடிப்பதால் நம் உடலில் உள்ள ட்ரைக்ளிசரைடு
களின் அளவு குறைந்து, தேவையில்லாத கொழுப்புச் சத்துக்கள் நீங்கும்.

* உடல் உறுப்புக்களின் செயல்பாடுகளும் அதிகரிக்க உதவும். ப்ளாக் டீ குடிப்பதால் ரத்த நாளங்கள் வலுப்பெறும். உடல் திறன் அதிகரிக்கும். ஒவ்வாமை பிரச்னைகள் குறையும். சர்க்கரை
வியாதியும் குணமாகும்.

தொகுப்பு: கவிதா பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.

The post நன்மை தரும் ப்ளாக் டீ appeared first on Dinakaran.

Related Stories: