தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. “நேற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வந்தது; தற்போது தென்மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது; 12 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு – தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும்” எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.

The post தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: