செங்கல்பட்டு முதல் ஊரப்பாக்கம் வரை குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலை: வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு முதல் ஊரப்பாக்கம் வரை தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். செங்கல்பட்டு முதல் ஊரப்பாக்கம் வரை சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் இரு மார்க்கத்திலும் உள்ள சாலைகள் முழுவதும் பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், இந்த சாலையில் 24 மணி நேரமும் கார், வேன் ஆட்டோ, லாரி, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஆம்னி பேருந்துகள் என லட்சக்கணக்கான வாகனங்கள் சென்னை, கோயம்பேடு, பாரிமுனை, கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்கின்றன.

இந்த மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலை கடந்த சில மாதங்களாகவே செங்கல்பட்டு முதல் ஊரப்பாக்கம் வரை அனைத்து பகுதிகளிலும் சாலைகள் பழுதாகி குண்டும், குழியுமாக மரண பள்ளங்களாக மாறி தொடர்ந்து நிறைய சாலை விபத்துக்கள் ஏற்பட்டுநாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. அதேபோல், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மழைக்கு முன்பாகவே இந்த சாலைகள் பழுதாகியிருந்தது.

முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக சாலைகளை சீர் செய்யாமல் விட்டதின் விளைவாக பெஞ்சல் புயலினால் பெய்த மழையாலும் கடந்த வாரம் பெய்த கனமழையாலும் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர், சிங்கபெருமாள் கோயில், மகேந்திராசிட்டி, பரனூர், சுங்கச்சாவடி மற்றும் செங்கல்பட்டு வரை சாலை குண்டும், குழியுமாக முழுமையாக பழுதாகி விபத்தை உருவாக்கி உயிரழப்புகளை அதிகரிக்கும் மரண பள்ளங்களாக காட்சியளிக்கிறது. உடனடியாக தேசிய நெடுஞ்சாலை துறையினர் இந்த சாலையை முறையாக பார்வையிட்டு வாகன ஓட்டிகளின் நிலைமையை கருத்தில் கொண்டும், விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகளை குறைக்கும் விதமாக சாலையை சீர்படுத்தி தரமான சாலையமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைத்தனர்.

The post செங்கல்பட்டு முதல் ஊரப்பாக்கம் வரை குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலை: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: