தமிழக எல்லைகளில் மருத்துவ கழிவுகளை கொட்டும் கேரளா: பிரேமலதா கண்டனம்

சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரளாவில் இருக்கின்ற கழிவு பொருட்களை அதாவது மருத்துவ கழிவு, குப்பைகள், எலக்ட்ரானிக் கழிவுகள், போன்றவற்றைத் தமிழ்நாட்டின் எல்லைகளில் டன் கணக்கில் கொண்டு வந்து கொட்டுகின்றனர். பக்கத்தில் இருக்கும் கேரளா எல்லா வளத்தோடும், நலத்தோடும் சிறப்பாக உள்ளது. அங்கே இருக்கும் குப்பைகளைக் கொட்டுவதற்கு இங்கு யார் அனுமதி வழங்கினார்கள்?. அரசு அதிகாரிகள், சுங்கச்சாவடியில் பணியாற்றுபவர்களும் என்ன செய்கின்றனர்? இது மிக மிக ஒரு கண்டிக்கத் தக்க விஷயம். தமிழக மக்கள் சார்பாக உடனடியாக அந்த குப்பைகளை அகற்றி, யார் அந்த குப்பைகளை கொட்டினார்கள் என்பதை கண்டறிந்து கேரளாவுக்கே அந்த குப்பைகளை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்.

The post தமிழக எல்லைகளில் மருத்துவ கழிவுகளை கொட்டும் கேரளா: பிரேமலதா கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: