இந்த போட்டியில் கலந்து கொள்ள 3 வீராங்கனைகள் மற்றும் 1 பயிற்சியாளருக்கு தலா ரூ.1,50,000 வீதம் மொத்தம் ரூ.6 லட்சத்துக்கான நிதியுதவியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் கீழ் வழங்கியிருந்தார். இந்த நிதியின் மூலம் அமெரிக்காவில் நடைபெற்ற கேரம் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை தமிழ்நாட்டு வீராங்கனைகள் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்தனர்.
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று, அமெரிக்காவில் நடைபெற்ற 6வது உலக கேரம் போட்டியில் தனிநபர், இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா ஒரு தங்க பதக்கம் வென்ற எம்.காசிமாவுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.1 கோடியும், இரட்டையர் பிரிவு மற்றும் குழு போட்டியில் தலா ஒரு தங்க பதக்கம் வென்ற வி.மித்ராவுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.50 லட்சமும், குழு போட்டியில் ஒரு தங்கம் மற்றும் இரட்டையர் பிரிவில் ஒரு வெள்ளி பதக்கம் வென்ற கே.நாகஜோதிக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.50 லட்சமும் என சிறப்பு உயரிய ஊக்கத்தொகையாக மொத்தம் ரூ.2 கோடிக்கான காசோலைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post உலக கேரம் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஆட்டோ ஓட்டுநர் மகள் எம்.காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசு: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.