இந்நிலையில் சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், கேரள வழக்கு ஒன்று நடந்து கொண்டிருந்த போது மருத்துவ கழிவுகள் விவகாரத்தை தமிழக அரசு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். இதுகுறித்து விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், கேரள மருத்துவக்கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். கேரள மருத்துவக்கழிவுகளை முறைப்படி அகற்றுவதற்கு தேவையான வசதிகளை மேற்கொள்ளாமல் ஏன் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேரள அரசுக்கு கேள்வி எழுப்பினர்.
பின்னர், கேரளாவில் இருந்து கொட்டப்படும் மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு உரிய செலவு தொகையை கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வசூலிக்க வேண்டும் . மேலும், கேரளாவில் மருத்துவக்கழிவுகளை அகற்றுவதற்கு என்னென்ன நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது? அங்குள்ள மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்ட வேண்டிய அவசியம் என்ன? என்பது குறித்து கேரள அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.
The post தமிழகத்தில் கொட்டப்பட்டு வரும் மருத்துவ கழிவு; கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம்: அகற்றுவதற்கான செலவை வசூலிக்க உத்தரவு appeared first on Dinakaran.