நெல்லை: கூடங்குளம் அருகே புத்தேரியில் விபத்து நிகழ்ந்த கல்குவாரியை தற்காலிகமாக மூட உத்தரவு

நெல்லை: கூடங்குளம் அருகே புத்தேரியில் விபத்து நிகழ்ந்த கல்குவாரியை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கல்குவாரியில் பாறைகளை உடைக்க வைத்த வெடி வெடித்து கற்கள் சரிந்ததில் 3 பேர் சிக்கிக் கொண்டனர். விபத்தை தொடர்ந்து கல்குவாரியில் கனிமவளத்துறை உதவி இயக்குநர் பாலமுருகன் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வில் குவாரிகள் விதிகளை மீறி இயங்கியது தெரிய வந்ததை அடுத்து தற்காலிகமாக மூட உத்தரவிட்டார்.

The post நெல்லை: கூடங்குளம் அருகே புத்தேரியில் விபத்து நிகழ்ந்த கல்குவாரியை தற்காலிகமாக மூட உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: