இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய ஜெர்வின், சிறுமியை கடந்த செப்டம்பர் மாதம் தனது கிராமத்துக்கு அழைத்து வந்தார். அங்குள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு அழைத்து சென்று, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை பலாத்காரம் செய்தாராம். பல முறை இதுபோன்று நடந்துள்ளது.
இந்நிலையில் சில நாட்களாக சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனே மகளிடம் தாய் கேட்டுள்ளார். அப்போதுதான் ஜெர்வின், பலாத்காரம் செய்ததை சிறுமி கூறினார். இதை கேட்டு தாய் அதிர்ச்சிடைந்தார். உடனே குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த தகவல் அறிந்ததும் ஜெர்வின் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
The post குளச்சல் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்; திருமணம் செய்வதாக ஆசை கூறி 10ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது appeared first on Dinakaran.