இந்நிலையில் சிறந்த வெளிநாட்டு திரைப்பட விருதுக்கான 15 படங்களுக்கான இறுதி பட்டியலை ஆஸ்கர் நிர்வாகிகள் நேற்று வெளியிட்டனர். இதில் இந்திய சார்பில் பரிந்துரைக்கப்பட்ட லாபட்டா லேடிஸ் திரைப்படம் இடம் பெறவில்லை இருப்பினும் இந்திய நடிகர்கள் நடித்து பிரிட்டனை சேர்ந்தவர்கள் தயாரித்த சந்தோஷ் என்ற திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்திய நடிகர் நடிகைகள் நடித்திருக்கும் திரைப்படமாக இருந்தாலும் சந்தோஷ் திரைப்படம் இங்கிலாந்து சார்பில் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த வெளிநாட்டு படத்திற்கான ஒரே ஆஸ்கர் விருதினை வெல்ல இந்த ஆண்டு பிரேசில், கனடா , டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாண்ட், ஐயர்லாந்து, இத்தாலி, நார்வே, பாலஸ்தீனம் உள்ளிட்ட 15 நாடுகளின் திரைப்படங்கள் போட்டியிடுகின்றன.
The post ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியது ‘லாபட்டா லேடீஸ்: இந்திய நடிகர்கள் நடித்த ‘சந்தோஷ்’ படத்துக்கு இடம் appeared first on Dinakaran.