குரூப் 2 மற்றும் 2A முதன்மை தேர்வுக்கான தேர்வு மையம், சான்றிதழை பதிவேற்றம் செய்ய இன்று கடைசி நாள்..!!

சென்னை: குரூப் 2 மற்றும் 2A முதன்மை தேர்வுக்கான தேர்வு மையம், சான்றிதழை பதிவேற்றம் செய்ய இன்று கடைசி நாள் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (முதன்மை) தேர்வு-II (தொகுதி IIA பணிகள்)
தாள் II-ற்கான தேர்வு மையத்தை தேர்வு செய்தல்

87% தேர்வர்கள் தேர்வுமையத்தை தேர்வு செய்துவிட்டனர்.எனவே தேர்வர்கள் கடைசி நாள் வரை காத்திராமல், உடனே தேர்வுமையத்தை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் (முதன்மை) தேர்வு-II (தொகுதி II மற்றும் IIA பணிகள்)
தமிழ் தகுதித் தேர்விற்கு விலக்கு பெற சான்றிதழை பதிவேற்றம் செய்தல்

75% தேர்வர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்து விட்டனர். எனவே தமிழ் தகுதித் தேர்விற்கு விலக்கு கோரிய மாற்றுத்திறனாளித் தேர்வர்கள் கடைசி நாள் வரை காத்திராமல் உடனே சான்றிதழை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சான்றிதழை குறிப்பிட்ட படிவத்தில் பதிவேற்றம் செய்யாத மாற்றுத்திறனாளித் தேர்வர்களுக்கு, தமிழ் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படமாட்டாது.

 

The post குரூப் 2 மற்றும் 2A முதன்மை தேர்வுக்கான தேர்வு மையம், சான்றிதழை பதிவேற்றம் செய்ய இன்று கடைசி நாள்..!! appeared first on Dinakaran.

Related Stories: