இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று பேசிய அமித் ஷா, அம்பேத்கரை அவமதித்து விட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் கூறியதாவது;
இந்திய அரசியலமைப்பையே வடிவமைத்த அம்பேத்கரை அமித் ஷா அவமதித்துள்ளார். அமித் ஷா பேச்சு அம்பேத்கர் மீதான அவரது வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமித் ஷா பேச்சு அம்பேத்கரை மட்டுமல்லாது அவரை பின்பற்றும் கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மனுஸ்மிருதியை பின்பற்றுவர்களால் அம்பேத்கரின் கொள்கைகளை ஏற்க முடியாது என்பது அமித் ஷா பேச்சு மூலம் உறுதியாகியுள்ளது என்றும், அம்பேத்கரை அவமதித்த அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மாணிக்கம் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார்.
The post அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு.. அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்: நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்!! appeared first on Dinakaran.