கோடியக்கரை ஊராட்சி மன்றத்திற்கு ரூ.30 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடக்கம்

 

வேதாரண்யம்,டிச.18: வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை ஊராட்சியில் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டடம் பழுதடைந்த காரணத்தால் புதிய ஊராட்சி மன்ற கட்டடம் கட்ட அனுமதி பெறப்பட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையர் கருணாநிதி முன்னிலை வகித்தார். விழாவில் ஊராட்சி துணைத் தலைவர் குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கார்த்திகா, ஜெயராஜ், ராமன், ராஜேஸ்வரி, ரஞ்சிதம் ஊராட்சி அலுவலர்கள் நாதன், தேவி மற்றும் ஊராட்சி மன்ற முன்னாள் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கோடியக்கரை ஊராட்சி மன்றத்திற்கு ரூ.30 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: