சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜர்

சென்னை: செம்மண் குவாரி வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2006-11ம் ஆண்டு காலத்தில் செம்மண் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக செம்மண் எடுத்ததாக அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் பொன்முடி மீது அதிகளவில் செம்மண் வெட்டி எடுக்கப்பட்டதால் அரசுக்கு ரூ.23 கோடி இழப்பு ஏற்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. அப்போது பொன்முடி சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தார்.

இந்த வழக்கில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடந்தாக கூறி அமலாக்கத்துறை, அமைச்சர் பொன்முடி வீடு, அவரது மகன்கள் வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை தற்போது அமலாக்கத்துவை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் பொன்முடிக்கு செம்மண் குவாரி முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

அந்த சம்மனை தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி தனது வழக்கறிஞருடன் நேரில் ஆஜரானார். அவரிடம் விசாரணை அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணையின் போது வழக்கு தொடர்பான விவரங்களை அமைச்சர் பொன்முடி அளித்தார். தொடர்ந்து நடந்த 7 மணி நேர விசாரணை மாலை 6 மணிக்கு முடிந்தது. இதனால் அமலாக்கத்துறை அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.

The post சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜர் appeared first on Dinakaran.

Related Stories: