அதிமுக சார்பில் 21ம் தேதி எடப்பாடி தலைமையில் கிறிஸ்துமஸ் விழா

சென்னை: ஜெயலலிதாவை தொடர்ந்து அதிமுக சார்பில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற 21ம் தேதி மாலை 4.30 மணியளவில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள லைட் ஆடிட்டோரியத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்த உள்ளார். இதில், கிறிஸ்தவ பேராயர்கள், ஆயர்கள், போதகர்கள் மற்றும் கிறிஸ்தவ பெருமக்களும், தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், அதிமுகவை சேர்ந்த எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அதிமுக சார்பில் 21ம் தேதி எடப்பாடி தலைமையில் கிறிஸ்துமஸ் விழா appeared first on Dinakaran.

Related Stories: