2026ல் வெற்றி பெறுவோம் என்று எடப்பாடி கூறுவது மூடநம்பிக்கையுடன் பேசுவது போலவே தெரிகிறது. அவரது செயல்பாடு, பிற கட்சிகளுக்குத்தான் பலனாக அமையும். எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டு கால ஆட்சியின் ஊழல் பயம் இருக்கிறது. கொடநாடு கொலை வழக்கு, அமைச்சர்களின் மீதான ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்து கொள்ள நினைத்து எடப்பாடி செயல்பட்டு வருகிறார். எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையத்தால் கிடைத்த வெற்றி தற்காலிக வெற்றி. அதிமுகவில் என்னுடைய ஸ்லீப்பர் செல்கள் மிக வேகமாக செயல்பட்டு வருகின்றனர். எடப்பாடியின் நடவடிக்கைக்கு முன்னாள் அமைச்சர்கள் வேதனை தெரிவித்து வருகிறார்கள். பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால்தான் அதிமுகவால் வெற்றி பெற முடியும். பாஜ கூட்டணிக்கு அதிமுக வந்தால், நான் ஏற்க தயார். இவ்வாறு தெரிவித்தார்.
The post அதிமுக இருக்கணும் என்றால் பாஜவுடன் கூட்டணிக்கு வரணும்… ஏஜென்டாக மாறி மிரட்டும் டிடிவி appeared first on Dinakaran.