இந்நிலையில் இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள், டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து கடை ஊழியர்களும் விரைந்தனர். பின்னர் சதுரங்கப்பட்டினம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், மர்ம நபர் 4 பேர் கடையின் சுவரை துளையிட்டு உள்ளே புகுந்து வெளியே வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அந்த காட்சியை வைத்து போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post கல்பாக்கம் அருகே துணிகரம்; டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு மதுபாட்டில்கள், பணம் திருட்டு: 4 பேருக்கு வலை appeared first on Dinakaran.