டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டத்தை அமல்படுத்த, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, அரசிலமைப்பு 129வது சட்ட திருத்தம் உள்ளிட்ட 2 மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த மசோதாவுக்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதனால், நேற்றே மக்களவையில் 2 மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்களவையில் ஒன்றிய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் மசோதாவை தாக்கல் செய்தார். மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
The post மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு appeared first on Dinakaran.