மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்காக ஆன்லைன் வழியாகவும், கவுண்டர்கள் மூலமாகவும் டிக்கெட் பெற்று பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் இன்று காலை பயணிகள் மெட்ரோ ரயில் டிக்கெட்டுக்கான முன்பதிவு ஆன்லைனில் செய்த போது முடியவில்லை. இதனால் பயணிகள் சிரமம் அடைந்தனர். இதனை தொடர்ந்து ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு சர்வர் செயல் இழந்ததால் டிக்கெட் வழங்குவது பாதிக்கப்பட்டு உள்ளது. பயணிகள் மெட்ரோ ஸ்டேஷன் கவுன்டர்களில் டிக்கெட் வாங்கிக் கொள்ள வேண்டும் என மெட்ரோ நிர்வாகம் அறிவுறுத்தியது.
இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் சேவை சீரானது. சிங்கார சென்னை கார்டு, சிஎம்ஆர்எல் டிராவல் கார்டுகள், மொபைல் க்யூஆரில் டிக்கெட் பெறலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
The post பயணிகள் கவனத்திற்கு: சென்னை மெட்ரோ ரயில் ஆன்லைன் டிக்கெட் சேவை சீரானது appeared first on Dinakaran.