×

2 நாள் குடிநீர் சப்ளை நிறுத்தம்

 

நாமக்கல், டிச.17: பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாமக்கல் மாநகரில் 2 நாள் குடிநீர் வினியோகம் இருக்காது என மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாநகராட்சி பழைய டவுன் பகுதிக்கு, மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து பரமத்தி ரோடு தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கு தினமும் குடிநீர் கொண்டு வரப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 18ம் தேதி(நாளை) தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாமக்கல் நகரில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதே நேரத்தில், பரமத்தி ரோட்டில் உள்ள தரைமட்ட தொட்டி சுத்தம் செய்யும் பணி மற்றும் குடிநீர் பிரதான குழாய் பராமரிப்பு பணி ஆகியவை நடைபெறுகிறது. எனவே, 17ம் தேதி(இன்று) மற்றும் 18ம் தேதி(நாளை) ஆகிய இரண்டு நாட்கள் நாமக்கல் பழைய நகர பகுதியில் குடிநீர் சப்ளை இருக்காது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

The post 2 நாள் குடிநீர் சப்ளை நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Corporation Commissioner ,Maheshwari ,Namakkal Corporation ,Town ,Mohanur Cauvery… ,Dinakaran ,
× RELATED கரூர் நாமக்கல் பைபாஸ் சாலையோரம் நிழற்குடைகளை சீரமைக்க வேண்டும்