சேர்ந்தமரம் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்து 6 மாணவர்கள் காயம்

சுரண்டை,டிச.17: சேர்ந்தமரம் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்த விபத்தில் 6 மாணவர்கள் காயம் அடைந்தனர். தென்காசி மாவட்டம், சுரண்டையை அடுத்துள்ள சேர்ந்தமரம் அருகே உள்ள நொச்சிகுளம் பகுதியில் தனியார் பள்ளி வாகனம் நிலை தடுமாறி வயக்காட்டில் கவிழ்ந்தது. மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் விவசாய வேலையில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், மாணவர்களை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் லேசான காயம்பட்ட 6 மாணவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து சேந்தமரம் போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் செந்தில்ராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

The post சேர்ந்தமரம் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்து 6 மாணவர்கள் காயம் appeared first on Dinakaran.

Related Stories: