அரசு ஊழியர்களுக்கு திருக்குறள் போட்டி

மதுரை, டிச. 17: கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டி நடத்தப்படுகிறது. இதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கலாம். இதன்படி, மாவட்ட அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டியின் முதல்நிலை போட்டியானது, மதுரை கோரிப்பாளையம் இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் டிச.21ம் தேதி நடைபெறுகிறது.

இதில் மதுரை மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியுட் அனைத்து நிலை அலுவலர்களும், அரசு மற்றும் அரசு உதவி பெறும், அங்கரீக்கப்பட்ட அனைத்து வகை தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம். இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தங்கள்பெயர்களை முன்பதிவு செய்ய வேண்டும். இதற்கு 97916 30022, 9566854637, 7373002751, 9842188823 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என தமிழ் வளர்ச்சித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post அரசு ஊழியர்களுக்கு திருக்குறள் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: