பல்லடம், டிச.17: பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை 4 சாலை சந்திப்பு சிக்னல் பகுதியில் மையத்தடுப்புகள் அகற்றப்பட்டதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்லடம் அடுத்த காரணம்பேட்டையில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், பொள்ளாச்சி-மைசூர் மாநில நெடுஞ்சாலை இணைகிறது. இதனால் இங்குள்ள 4 சாலை சந்திப்பு சிக்னல் எந்நேரமும் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும். அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு மையத்தடுப்புகள் அகற்றப்பட்டதால் விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘சாலை விரிவாக்க பணிகள் முடிந்ததை தொடர்ந்து, ரவுண்டானா அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது. மையத்தடுப்புகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து, வாகனங்கள் தாறுமாறாக வந்து செல்வதால் நான்கு சாலை சந்திப்பு சிக்னல் பகுதியில் விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே இருந்தது போல் மையத்தடுப்புகள் அமைக்க வேண்டும். அல்லது திட்டமிட்டபடி ரவுண்டானா அமைக்க வேண்டும்’’ என்றனர்.
The post காரணம்பேட்டை 4 சாலை சந்திப்பில் விபத்து அபாயம் appeared first on Dinakaran.