இதனால் விவசாயி எவர் ஒருவருக்கும் அவர் கொடுக்கும் நிலச்சான்று பரப்பிற்குண்டான தொகையை கடனாகக் கொடுப்பதில்லை. 5 ஏக்கருக்கான சாகுபடிச் சான்று கொடுத்து கடன் கோரினால் அந்த விவசாயிக்கு 2 ஏக்கருக்கு மட்டுமே கூட்டுறவு நிறுவனங்களில் கடன் வழங்கப்படுகிறது. கடன் கோரி விண்ணப்பிக்க செய்யும் விவசாயிகள் அனைவருக்குமே அவர்கள் சாகுபடி நிலத்திற்கான அளவில் முழுமையாக கடன் வழங்கப்படாமல் குறைந்த தொகையே வழங்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் தனக்கு தேவைப்படும் கூடுதல் தொகையை தனியாரிடம் கூடுதல் வட்டிக்கு கடன் பெற வேண்டிய நிலை தற்போது உள்ளது. எனவே சாகுபடி பரப்பிற்கேற்ப கடன் தொகை முழுவதையும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு காலத்தில் ஒதுக்கீடுட செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
The post வேளாண் கடன் உச்சவரம்பு உயர்வு ஏமாற்று வேலை: விவசாயிகள் சங்கம் கண்டனம் appeared first on Dinakaran.